மத்திய அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வு பெறும் வயதினை இரண்டு ஆண்டுகள் அதாவது 60 வயதில் இருந்து 62 வயது ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. கடந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இந்த அகவிலைப்படி கடந்த ஜூலை மாதத்தை முன் தேதியிட்டு வழங்குவதாகவும் அரசாணை வெளியிடப்பட்டது. அது மட்டும் இல்லாமல் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சிறப்பு போனஸ் போன்றவையும் வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக மீண்டும் சம்பள உயர்வு வழங்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டது.
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெறும் வயதை உயர்த்த முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 62 ஆக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.