Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. டிஏ நிலுவைத்தொகை எப்போது?…. விரைவில் முக்கிய ஆலோசனை…..!!!!

மத்திய அரசு சென்ற 2020ஆம் வருடம் கொரோனா பரவ தொடங்கிய சமயத்தில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை நடைமுறைபடுத்தியது. அதுமட்டுமின்றி நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவழித்து வந்தது. அத்துடன் தொழில்கள் அனைத்தும் முடங்கி இருந்ததால் வருவாய் தட்டுப்பாடு ஏற்பட்டு, அரசுக்கு பொருளாதார சிக்கல் இருந்தது. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொகையை சென்ற 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை செலுத்தாமல் நிலுவையில் வைத்தது.

அதன்பின் உள்ள தவணைகளுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. எனினும் இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படியானது ஜூலை 1ஆம் தேதி முதல் தான் வழங்கப்பட்டது. நிலுவையிலிருந்த காலத்திற்கான தொகை வழங்கப்படாது என அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் தொடர்ந்து அரசு நிலுவைதொகையை கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது வந்தனர்.

இந்த நிலையில் வருகிற நவம்பர் மாதத்தில் அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்குவது பற்றிய ஆலோசனை கூட்டம் நடக்க இருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்தியஅரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான அகவிலைப்படி நிலுவைதொகை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |