இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்திற்கு பின் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு பேட்டிளித்தபோது “அகமதாபாத் மற்றும் சிஎஸ்எம்டி, மும்பை போன்ற 3 முக்கிய ரயில் நிலையங்களை மீண்டுமாக மேம்படுத்துவதற்கான இந்திய ரயில்வேயின் முன் மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டமானது சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீட்டை உள்ளடக்கியது ஆகும். இதையடுத்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை(DA) 4 % உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து இலவச ரேஷன் அரசி திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது” என அவர் கூறினார்.