Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு…. அகவிலைப்படி உயர்வு….. மத்திய அமைச்சரவை ஒப்புதல்….!!!!

இந்தியாவில் பணவீக்கம், விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஜனவரி-ஜூன் மற்றும் ஜூலை-டிசம்பர் என 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஜூலை-டிசம்பர் மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். பண்டிகை காலம் நெருங்கிவிட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுதாரர்களுக்கான அகவிலைப்படி 38% உயர்ந்துள்ளது. இதனால் 50 லட்சத்துக்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கும், 60 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வுதியதாரர்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |