Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு…. என்னென்னு தெரியுமா?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி அரசு சமீபத்தில் ஒரு மிகப் பெரிய செய்தியை வழங்கியது. இதன் காரணமாக ஊழியர்களின் ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது தீபாவளி போனஸ் அறிவிப்பும் வந்திருப்பதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகைகாலம் சற்று முன்னதாகவே துவங்கிவிட்டது என்றே கூறலாம். சென்ற மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை (டிஆர்) ஜூலை 1, 2022 முதல் 4 சதவீதம்  உயர்த்தியது. இந்த 4 சதவீத உயர்வுக்குப் பின் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 38 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இது தவிர்த்து 2021-22 நிதி ஆண்டில் ரயில்வே ஊழியகளுக்கு 78 தினங்களுக்கு சமமான உற்பத்தித் திறன் இணைக்கப்பட்ட போனஸ் (PLB) வழங்கவும் இந்த வாரம் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஊதியம் பற்றிய இந்த அறிவிப்புகளுக்கு மத்தியில் நரேந்திர மோடி அரசு ஊழியர்களுக்குரிய 8-வது ஊதியக்குழுவை விரைவில் அமைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுக்காக சென்ற 2014ஆம் வருடம் பிப்ரவரி 28ஆம் தேதி ஊதியக்கமிஷன் அமைக்கப்பட்டது என்பதை அரசு ஊழியர்கள் அறிந்திருக்கவேண்டும். இதற்கிடையில் 5,6,7வது ஊதியக்குழுக்களின் வாயிலாக கண்ட போக்குகளின் அடிப்படையில், 8வது ஊதியக்குழுவானது 2023ல் அமைக்கப்படும் என எதிர்பார்பாகவுள்ளது.

இருந்தாலும் மத்திய அரசால் இன்னும் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி பண்டிகைக்கு முன்பாக, ஜூலை 1, 2022 முதல் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 4 % உயர்த்த மத்திய அமைச்சரவை செப்டம்பர் 28 அன்று ஒப்புதல் வழங்கி அறிவிப்பினை வெளியிட்டது. அரசினுடைய இந்த நடவடிக்கையால் 41.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் அடைந்துள்ளனர். குறிப்பிடத்தக்க அடிப்படையில், அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் சமீபத்திய ஊதியம், ஓய்வூதியத்தின் தற்போதைய விகிதமான 34 சதவீதத்தை விடவும் 4 % அதிகரித்துள்ளது. ஜூன், 2022ல் முடிவடைந்த காலத்துக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் 12 மாத சராசரியின் சதவீத அதிகரிப்பின் அடிப்படையில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அதிகரிக்கப்படுகிறது.

உயர்த்தப்பட்ட அகவிலைப்படியால் கருவூலத்தில் வருடத்திற்கு ரூபாய்.6,591.36 கோடி அளவிலும், 2022-23ல் (ஜூலை, 2022 முதல் பிப்ரவரி 2023 வரையிலான 8 மாதங்கள்) ரூ.4,394.24 கோடி அளவிலும் தாக்கம் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. ரயில்வே ஊழியர்களுக்கு 2021-2022 நிதி ஆண்டிற்கான போனசை அரசு அறிவித்து இருக்கிறது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித் திறன்-இணைக்கப்பட்ட போனஸ் வழங்க மத்திய அரசு அக்டோபர் 12 அன்று ஒப்புதல் வழங்கியது. இது அரசுஊழியர்களுக்கு தீபாவளிப் பண்டிகைக்குரிய பரிசாக வழங்கப்படுகிறது. 2021-22 நிதி ஆண்டில் RPF/RPSF பணியாளர்களைத் தவிர்த்து நான் கெசடட் ரயில்வே ஊழியர்களுக்கு 78 தினங்கள் ஊதியத்துக்கு சமமான உற்பத்தித் திறன்-இணைக்கப்பட்ட போனஸ் (PLB) வழங்கப்படும். ரயில்வே அமைச்சகத்தின் இந்த நடவடிக்கையால் சுமார் 11.27 லட்சம் நான் கெசடட் ரயில்வே ஊழியர்கள் பயனடையவுள்ளனர். ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்குரிய PLB-ஐ செலுத்தியதன் நிதித்தாக்கம் ரூ.1,832.09 கோடி என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |