இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது மாநிலங்களவை செயலகத்தில் மீண்டும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் பணியாற்றும் 1300 ஊழியர்களின் வருகை பதிவுக்காக பயோமெட்ரிக் முறை கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாற்றப்பட்டது. அதை அடுத்து கொரோனா தொற்று காரணமாக மார்ச் 2020 பயோமெட்ரிக் முறை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நாட்டில் தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து மீண்டும் பயோ மெட்ரிக் முறையை செயல்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” கொரோனா தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது ஜூன் 1-ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. எனவே அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் பயோமெட்ரிக் மூலம் வருகையை பதிவு செய்ய வேண்டும். தற்போது தொழில் நுட்பப் பிரச்சினைகள் உள்ளனவா என அனைத்தும் ஆராயப்பட்டு சோதனை முறையில் மே 31 வரை பயோமெட்ரிக் வருகைப்பதிவு செயல்படுத்தப்பட உள்ளன” என்று தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகம் மற்றும் தனியார் அலுவலகங்களிலும் பயோ மெட்ரிக் முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.