இந்தியாவில் விலைவாசிக்கு ஏற்றவாறு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை மத்திய அரசு கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைத்திருந்தது. இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் மீண்டும் அகவிலையை வழங்க ஆரம்பித்தது. மேலும் ஜூலை மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28 % இருந்து 31 % உயர்த்தப்பட்டது. அதன்பின் தற்போது புத்தாண்டையொட்டி மேலும் 3 % அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் சம்பள உயர்வு தொடர்பாக அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையில் அடிப்படை ஊதியம் 28,000 ஆக உயரும் என்று கூறுகின்றனர்.
அவ்வாறு ஊதியம் உயர்வு கிடைத்தால் பின் அகவிலைப்படி மற்றும் பிற கொடுப்பனவுகளும் அதிகரிக்கும். இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இதற்கிடையில் மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைபடியை உயர்த்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் தமிழக அரசானது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கியுள்ளது. இது வரும் 1 தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான நிலுவையிலுள்ள அகவிலைப்படி தொகை கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக எவ்வித அறிவிப்புகளும் வெளியாகாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்திருந்தனர். இந்த நிலையில் புத்தாண்டு அன்று அகவிலைப்படி நிலுவைத்தொகை முழுவதும் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி ஊழியர்களுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரையிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.