மத்திய அரசு ஊழியர்கள் அடுத்தகட்ட அகவிலைப்படி உயர்வை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு விரைவில் மகிழ்ச்சி செய்தி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய பண வீக்கத் தரவுகளின்படி, 4 % உயர்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு 4 % உயர்வு இருந்தால் அகவிலைப்படி 38 % வரை அதிகரிக்கும். இது மத்தியஅரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய உயர்வை ஏற்படுத்தும். இதற்கிடையில் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருப்பவர்கள் இன்னும் சிலகாலம் காத்திருக்க வேண்டி இருக்கும். அதாவது, அமைச்சரவைக் கூட்டத்தில் மத்தியஅரசு அறிவிப்பை வெளியிடும். மத்தியஅரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை முதல் 34 %க்கு பதிலாக 38 % DA மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வரவில்லை. அகில இந்திய நுகர்வோர் விலைக்குறியீடு 129க்கு மேல் இருக்கிறது. எனவே இந்த வருடம் ஜனவரி மாதம் இருந்த அகவிலைப்படி அதிகரிப்பைக் காட்டிலும் ஜூலை மாதத்துக்கான அகவிலைபபடி அதிகரிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். ஜனவரி மாதம் 3 % அதிகரிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 4 % இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்படும்?.. மற்றும் எப்போது அளிக்கப்படும் என்ற கேள்விக்கு, சமீபத்திய அறிக்கைகள் அளிக்கும் பதில் என்ன என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.
செப்டம்பர் மாதம் நவராத்திரியின்போது இதற்குரிய அறிவிப்பு வெளியாகலாம். உயர்த்தப்பட்ட சம்பளத்தொகையானது மத்திய அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்குகளுக்கு செப்டம்பர் 30ம் தேதி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் அகவிலைப்படி எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கீடுகளின்படி, ரூபாய். 31,550 அடிப்படைச் சம்பளம் உள்ள ஊழியர்கள் வருடத்திற்கு ரூபாய்.15,144 உயர்வு பெறக்கூடும். மறு புறம் அதிகபட்ச வரம்பில் ரூபாய்.56,900 அடிப்படை சம்பளம் இருப்பவர்கள் வருடத்திற்கு ரூபாய்.27,312 உயர்வை பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.