இந்தியாவில் மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு சமீபத்தில் 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தியது. இதன் வாயிலாக மொத்த அகவிலைப்படி 34 சதவீதம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊழியர்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டமானது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தொழிலாளர்களுகான புது திட்டங்களை நடைமுறைப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதன்படி புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் நிறுவனங்கள் 5 நாட்களுக்கு பதிலாக 4 நாட்கள் வேலை படியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் 3 நாட்கள் வார விடுமுறை கிடைக்ககூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வேலை நேரம் குறைக்கப்படாது என்பதால், ஊழியர்கள் 8 மணி நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரம் வேலை செய்தாக வேண்டிய சூழல் ஏற்படும். இவ்வாறு புது விதிகளின் அடிப்படையில் பணியாளரின் அடிப்படை சம்பளம் மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் ஆக இருக்க வேண்டும்.
அதே சமயத்தில் குறிப்பாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு வீட்டு சம்பளம் குறையும். இந்த புதிய வரைவு விதிகளின் அடிப்படையில் பணி ஓய்வுக்குப் பின் பெறப்படும் பணமும், பணிக்கொடைத் தொகையும் இதில் அதிகரிக்கும். மேற்கண்ட விதிகள் நடப்பு நிதி ஆண்டில் செயல்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. அனைத்து மாநிலங்களும் இதை ஒரே சமயத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விதிகள் நடைமுறைக்கு வர இன்னும் 3 மாதங்கள் ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது.