Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்…. அன்புமணி கோரிக்கை…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கு மத்தியில் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு தர வேண்டும் என்று முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி வழக்கத்தை மாநில அரசே எடுத்து நடத்த முன்வந்தது வரவேற்கத்தக்கது என்று அன்புமணி கூறியுள்ளார். மேலும் மாநில அரசு மத்திய அரசிடம் வைத்த கோரிக்கைக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த தடுப்பூசி வளாகத்தில் உலகத்தரம் வாய்ந்த தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |