Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஓய்வுதாரர்களுக்கு எக்ஸ்ட்ரா பென்ஷன்… எந்த வயதில் தெரியுமா?… வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் முதிர்வுகாலத்தில் உதவும் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் வழங்கப்படுவதற்கு மத்திய அரசானது விதிமுறைகளை வகுத்துள்ளது. சென்ட்ரல் சிவில் சர்விஸஸ் விதிகள் சென்ற 2021 ஆம் வருடம் டிசம்பர்மாதம் திருத்தப்பட்டது. இந்த விதிகள் சென்ற 2003 டிசம்பர் 31 (அல்லது) அதற்கு முன் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கும், பாதுகாப்பு சேவைகளில் உள்ள சிவில் அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த விதிகள் ரயில்வே ஊழியர்கள், அனைத்திந்திய சேவைகளின் உறுப்பினர்கள் போன்றோருக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்ட்ரல் சிவில் சர்வீசஸ் விதிகளின்படி மத்திய அரசின் கீழ் பணிபுரிந்த ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட வயது வரம்பை எட்டிய பிறகு அவர்களுக்கு படிப்படியாக ஓய்வூதியம் (அல்லது) கருணைக் கொடுப்பனவு அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் 80, 85, 90, 95 மற்றும் 100 வயதுகளை எட்டியவுடன் சூப்பர் சீனியர் சிட்டிசன்களாக மாறிவிடுகின்றனர்.

இதனால் இவர்களுக்கு முன்பே வழங்கப்படும் ஓய்வூதியத்துடன் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும். அந்த வகையில் மத்திய அரசு ஓய்வூதியதாரர் ஒருவர் 80 வயதை எட்டியபின் அடுத்தடுத்த 5 வருடங்களுக்கு ஓய்வூதிய சதவீதமானது அதிகரிக்கப்படும். அத்துடன் இந்த கூடுதல் ஓய்வூதியம் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய காலண்டர் மாதத்தின் முதல் நாளில் இருந்து கணக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படும். உதாரணமாக ஒரு மத்தியஅரசு ஓய்வூதியதாரர் 1945-ஆம் வருடம் அக்டோபர் 12 ஆம் தேதி பிறந்தால் அவருக்கு கூடுதலான ஓய்வூதியம் அக்டோபர் முதல் நாளிலிருந்து வழங்கப்படும்.

அத்துடன் சென்ட்ரல் சிவில் சர்விஸஸ் விதிகளின்படி

# மத்திய அரசு ஓய்வூதியதாரரின் வயது 80 -85 வரை இருந்தால் அவர்களுக்கு அடிப்படை ஓய்வூதியம் (அல்லது) கருணை கொடுப்பனவில் 20% அதிகரித்து வழங்கப்படும்.

# மத்தியஅரசு ஓய்வூதியதாரர் ஒருவர் 85 -முதல் 90 வயது வரை இருப்பவர்களுக்கு அடிப்படை ஓய்வூதியம் (அல்லது) கருணை கொடுப்பனவில் 30 சதவீதம் அதிகரிக்கப்படும்.

# மத்திய அரசு ஓய்வூதியதாரர் ஒருவர் 90 -95 வயது வரை உள்ளவர்களுக்கு அவர்களின் அடிப்படை ஓய்வூதியம் (அல்லது) கருணை கொடுப்பனவில் 40 சதவீதம் அதிகரிக்கப்படும்

#மத்திய அரசு ஓய்வூதியதாரர் ஒருவர் 95 -100 வயது வரை இருப்பவர்களுக்கு அடிப்படை ஓய்வூதியம் (அல்லது) கருணை கொடுப்பனவில் 50 சதவீதம் அதிகரிக்கப்படும்.

# மத்திய அரசு ஓய்வூதியதாரர் ஒருவர் 100 வருடங்கள் (அல்லது) அதற்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை ஓய்வூதியம் (அல்லது) கருணை கொடுப்பனவில் 100 சதவீதம் அதிகரிக்கப்படும்.

Categories

Tech |