மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுவோர் அனைவரும் ஜீவன் பிரம்மாண் பத்ரா என்று அழைக்கப்படும் வாழ்நாள் சான்றிதழை ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும்.80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த வருடம் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் வாழ்நாள் சான்றிதழை நவம்பர் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்நிலையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் சில முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.அதன்படி மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் நேரடியாக ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளிடம் தங்களது வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். அடுத்ததாக ஓய்வூதியம் பெறுவோர் ஜீவன் பிரம்மாண் போர்டலை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக தங்களது வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். ஓய்வூதியம் பெறுவோர் தங்களது கைரேகைகளையும் பயன்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் கைரேகை சாதனத்தை மொபைல் போனுடன் இணைக்க ஓடிபி கேபிளை பயன்படுத்தலாம். அடுத்ததாக 12 பொதுத்துறை வங்கிகளை உள்ளடக்கிய கூட்டணி மூலமாகவும் டோர்ஸ் டெப் பேங்கிங் வழங்கப்படுகிறது . நாடு முழுவதும் உள்ள நூறு முக்கிய நகரங்களில் அதன் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை வழங்குகிறது.வங்கி முகவரி சேவையை வழங்க ஓய்வூதியதாரரின் வீட்டுக்கு வந்து ஆவணங்களை பெற்றுக் கொள்வார்கள். இதன் மூலமாக இருந்த இடத்திலிருந்து ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.