இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வோரின் விபரங்களை மத்திய அரசே வைத்துக் கொள்வது உண்டு ஆட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும்,யார் யாருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது என்ற விபரங்களை மாநில அரசுகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.