மத்திய உள்துறை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையின் பெயரிலேயே விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது..
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு விநாயகர் சதுர்த்தியை பொது வழியில் வைத்து கொண்டாடக்கூடாது என்று தடை விதித்து, வீடுகளில் வைத்து பொதுமக்கள் வழிபடலாம் என்றும் அறிவுறுத்தியது.. ஆனால் இதற்கு பாஜக கட்டுப்பாடுகளை விதித்து பொது வெளியில் வழிபடலாம் என்று அரசு சொல்லி இருக்கலாம்.. ஆனால் கொண்டாட தடை விதித்தது ஏற்கத்தக்கதல்ல என்று கூறி வருகிறது..
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி தர வேண்டும் என பாஜக எம்எல்ஏ காந்தி கோரிக்கை வைத்தார்.. இதனையடுத்து எம்எல்ஏ காந்தி கோரிக்கைக்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.. அவர் கூறியதாவது, மத்திய உள்துறை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையின் பெயரிலேயே விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.. வரும் முன் காப்போம் என்ற வகையில் செயல்படுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று அவர் கூறினார்..