மத்திய அரசு வழிகாட்டுதலின்படியும்,நீதிமன்ற உத்தரவின் படியும் மத ஊர்வலங்களை மேற்கொள்ளாமல் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேலூர்,ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கலந்தாய்வு செய்தார்.
அத்துடன் மேலும் அவர் கூறியதாவது:
வேலூர்,ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பானது கட்டுப்பாட்டில் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் 2609 காய்ச்சல் முகாம்கள் கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கு நடத்தப்பட்டுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3350 காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனாவால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், மக்களுக்கான திட்டங்கள் குறைவின்றி நிறைவேற்றப்பட்டு வருகிறது.குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவருக்கும் விலையில்லா முகக்கவசம் கொரோனாவை தடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சுய உதவிக் குழுவின் சார்பாக மூன்று ஆண்டுகளில் ரூபாய் 585.45 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன திட்டத்தில் 3882 பேரும்,ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3878 பேரும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 3540 பேர் பயனடைந்துள்ளனர் என்றும் முதல்வர் கூறினார்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் மத்திய அரசின் வழிகாட்டுதல் படியும் நீதிமன்றத்தின் அறிவுரைப்படியும் மேற்கொள்ளுமாறு வேண்டுகிறேன் என்று முதல்வர் தெரிவித்தார்.