Gpay, Phonepe பணப் பரிவர்த்தனை செயலிகளுக்குக் கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், யுபிஐ பண பரிவர்த்தனை சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. யுபிஐ சேவையை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் மற்ற வழிகள் மூலம் செலவுகளை ஈட்டிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இதன் மூலம் யுபிஐ பண பரிவர்த்தனை சேவை தொடர்பாக நிலவி வந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Categories