Categories
அரசியல்

மத்திய அரசு திட்டத்தில்…. திமுக போட்டோவை ஒட்டுறாங்க…. அண்ணாமலை குற்றசாட்டு…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்கள் பயன்பெறும் வகையில் உள்ள திட்டங்களில் 80% மத்திய அரசு வழங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.

பா. ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து கீழநத்தம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,  “மக்களுக்கான திட்டங்களில்  80% மத்திய அரசால் கொண்டுவரப்பட்டவை, மாநில அரசிற்கு இதில் எவ்வித சம்பந்தமும் இல்லை.

திமுகவிற்கு எந்த விஷயத்திற்கும் எதிர்த்துப் பேசுவது வாடிக்கையாக உள்ளது. மேலும் இவர்களுடைய போட்டோவை மத்திய அரசு திட்டங்களில் ஒட்ட வேண்டும் என்பதில் இருக்கும் ஆர்வமானது, அத்திட்டங்களை லஞ்சமின்றி மக்களுக்கு கொண்டு சேர்க்க விருப்பம் இல்லை” என பேசியுள்ளார்.

Categories

Tech |