Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு”… திருச்சியில் நான்கு மையங்களில் நடந்த தேர்வு…!!!

மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு திருச்சியில் 4 மையங்களில் நடைபெற்றுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு-II மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வானது மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் ஞாயிற்றுக் கிழமையான நேற்று நடந்தது. இந்த தேர்வானது திருச்சி மாவட்டத்தில் நான்கு மையங்களில் நடந்தது.

தேர்வுக்காக நான்கு தேர்வுக்கூட மேற்பார்வையாளர்கள் துணை கலெக்டர் நிலையில் ஒரு அலுவலர், துணை தாசில்தார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் கடைசி நேரத்தில் சில மாணவர்கள் வந்தபோது போலீசார் அனுமதித்தார்கள். ஆனால் அந்த மாணவர்களை தேர்வு மைய அலுவலர்கள் அனுமதிக்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்.

Categories

Tech |