ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்காக அவர்களே எடுத்துக் கொள்ளும் வகையில் ஐ.ஏ.எஸ் விதிகள் 1954-ல் திருத்தம் செய்வதற்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இதற்கு மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு பணிக்காக போதுமான அதிகாரிகளை மாநிலங்கள் அனுப்பி வைக்கவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
அதன்படி, மத்திய அரசு பணிக்காக ஒதுக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை கடந்த 2011-ல் 309-ஆக இருந்த நிலையில், தற்போது 223 ஆக குறைந்துள்ளது என்றும், இது இணைச்செயலாளர் வட்டம் வரையில் தொடர்வதாகவும், பணியாளர் நலத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். துணைச்செயலாளர், இயக்குனர் மட்டத்திலான அதிகாரிகளின் எண்ணிக்கை 621 இல் இருந்து 1,130-ஆக உயர்ந்த போதும் மத்திய அரசு பணிக்காக ஒதுக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 117-ல் இருந்து 114-ஆக குறைந்திருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் இது மத்திய அரசின் செயல்பாட்டை மிகவும் பாதிப்பதாக கூறப்பட்டுள்ளது.