பல வருடங்களாக தமிழகம் கர்நாடகா என இரு மாநில அதிரடிகளுக்கும் தண்ணிக்காட்டி வந்த வீரப்பனை என்ற தமிழ்நாடு சிறப்பு அதிரடி படையின் தலைவராகவும் பணியாற்றியவர் விஜயகுமார் ஐபிஎஸ். தமிழகத்தை சேர்ந்த இவர் 1975 ஆம் பிரிவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். பட்டுக்கோட்டை காவல் உதவி கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்ட இவர் தர்மபுரி, சேலம் போன்ற மாவட்டங்களில் எஸ்பியாக பணியாற்றியுள்ளார். அதன் பின் மத்திய அரசு பணிக்கு அனுப்பப்பட்ட விஜயகுமார் ஐபிஎஸ் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மெய் காவல் படை தலைவராக பணியாற்றியுள்ளார்.
அதன்பின் தமிழக அரசு பணிக்கு திரும்பிய அவர் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்துள்ளார். 1991 ஆம் வருடம் ஜெயலலிதா முதல்வரான உடன் அவரது மெய்க் காவல் படை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து மீண்டும் மத்திய அரசு பணிக்கு அனுப்பப்பட்டு மத்திய ஆயுதப்படை இயக்குனர் ஜெனரலாக பதவி வகித்த விஜயகுமார் ஐபிஎஸ் கடந்த 2012 ஆம் வருடம் ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு மத்திய அரசு மீண்டும் பணி நீட்டிப்பு வழங்கி உள்ளது இதனை அடுத்து மத்திய அரசு உள்துறை பணிக்கு சென்ற அவர் ஆறு வருட காலம் பணி நீட்டிப்பில் பணியாற்றியதை தொடர்ந்து 2018 ஆம் வருடம் ஓய்வு பெற்றுள்ளார்.
அதன்பின் ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக செயல்பட்டார் அதன் பின் உள்துறை அமைச்சக மூத்த ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில் அந்த பதவியை விஜயகுமார் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பியுள்ளார் தற்போது சென்னையில் உள்ள விஜயகுமார் ஐபிஎஸ் தனிப்பட்ட காரணங்களால் ராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை அமைச்சர் அதிகாரிகள் மற்றும் தனது பதவிக்காலம் முழுவதும் ஒத்துழைத்த அனைத்து மாநில போலிஸ் கடைகளின் தலைவர்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.