Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு பணி…. இலவச வகுப்பில் சேர உடனே இதை பண்ணுங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்கு வேலை வாய்ப்பு துறை அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி கம்பைன்ட் கிராஜுவல் லெவல் தேர்வுக்கான அறிவிப்பை விரைவில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட உள்ளது.அதனால் சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இந்தத் தேர்வு எழுத ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு கல்வி தகுதியாக இருக்க வேண்டும்.தேர்வுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளதால் பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் தங்களின் பெயர், கல்வி தகுதி மற்றும் முகவரி ஆகியவற்றை 9597557913என்ற whatsapp எண்ணுக்கு அனுப்பி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என வேலை வாய்ப்பு துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |