Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு மின் கட்டணம் உயர்த்த சொல்வது ஏன் தெரியுமா?…. சீமான் கூறிய அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழ் தேச தன்னுரிமை கட்சியின் தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளை மட்டுமில்லாமல் அதிமுகவையும் விமர்சித்து சீமான் பேசினார். அப்போது பேசிய அவர், தமிழனுடைய அறிவு நெற்களஞ்சியம் போல் உலகம் முழுவதும் கொட்டி கிடைக்கிறது. தமிழில் எழுதி வைத்த பாக்களை படித்து பார்த்து திட்டம் போட்டால் நாடு நலனாக இருக்கும். இதனைத் தொடர்ந்து ரூ. 6 லட்சம் கோடி தமிழக அரசுக்கு கடன் இருக்கும்போது ரூ.80 கோடில் பேனா வைக்கத் திட்டம் போடுகிறது. இலங்கையில் அதிகாரமும் இல்லை, அரசும் இல்லை. இந்நிலையிலும் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் எல்லை தாண்டி வந்ததாக கேரள மீனவர்கள் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்பட்டதை கிடையாது. அதற்கு காரணம் கேரளாவின் ஆட்சியாளர்கள் அந்த மண்ணை சார்ந்தவர்கள். தமிழகத்தை வெளியே இருந்து வந்தவர்களை ஆட்சி செய்கிறார்கள்.

இதனை தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் பல்லாயிரம் படிப்பகங்களை திறந்து மக்களை படிக்க வைத்தார். திராவிட மாடல் பல்லாயிரம் குடிப்பகங்களை திறந்து குடிக்க வைக்கிறது. ஜப்பானில் கடல் அலையில் மின்சாரம் தாக்கியுகிறார்கள். அந்த தொழில்நுட்பத்தை நான் ஏன் நாம் பயன்படுத்த முடியவில்லை. காற்றாலை, சூரிய ஒளி மின்சாரத்தை தனியாக நிறுவங்கள் செய்கின்றன. ஆனால் பாதிப்பை ஏற்படுத்தும் அணு மின்சாரம், அனல் மின்சாரம் ஆகியவை அரசுதான் உற்பத்தி செய்கிறது.மின்சார உற்பத்தி செய்யும் அதானி வளம் பெற வேண்டும் என்ற நோக்கில் தான் மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு வலியுறுத்துகிறது. நிலக்கரியை தனியாரிடம் வாங்க மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது என சந்திரசேகர ராவ் கூறுகிறார். யார் அந்த தனியார் என்று பார்த்தால் அதானி. ஒற்றைக் கட்சியை ஆட்சி முறையை ஒழித்து கூட்டாட்சி முறையை கொண்டு வர வேண்டும். இதனையடுத்து அரசியல் கொள்கை என்பதே இல்லாதவர்கள் பாஜகவினர். எல்லோருக்குமான அரசு என்பது இந்தியாவில் இல்லை. மக்களுக்கான அரசு உருவாக்க வேண்டும் அது நாம் தமிழர் கட்சியின் அரசாக இருக்கும். முதல்வர் ஸ்டாலின் அவரது மகனுக்கு முடி சூட்ட காத்திருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி கட்சி ஆரம்பித்தால் அவரது மகன் மனைவி கூட அதில் சேர மாட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |