இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மறுபுறம் நிம்மதியளிக்கும் விதமாக ஏரளமானவர்கள் குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக கொரோனா நோயாளிகளின் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டட பணியை கைவிட கோரி பிரதமர் மோடிக்கு சோனியா, சரத் பவார், தாக்கரே, மம்தா, ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். அதில் புதிய நாடாளுமன்ற பணிக்கு ஒதுக்கிய நிதியை ஆக்சிஜன், தடுப்பூசி வாங்க பயன்படுத்த வேண்டும். மேலும் நாடு முழுவதும் இலவச தடுப்பூசிக்கு முகாம்களை தொடங்க வேண்டும் என குறிப்ப்பிட்டுள்ளனர்.