Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசே… ஒட்டுமொத்த விவசாயிகளும் அழிந்து போவார்கள்…!!!

வேளாண் சட்டத்தை திரும்ப பெறவில்லை என்றால் ஒட்டுமொத்த விவசாயிகளும் அழிந்து போவார்கள் என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதனால் பல்வேறு இடங்களில் விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நடைமுறைக்கு ஒத்து வராத புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை என்றால் ஒட்டுமொத்த விவசாயிகளும் அழிந்து போவார்கள் என்று அய்யாக்கண்ணு பேட்டியில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும் டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க, நாங்கள் 200 பேர் தயாராக இருந்தோம். அதற்காக ரயில் டிக்கெட் எடுத்து வைத்திருந்தோம். ஆனால் கடந்த 24 ஆம் தேதி திடீரென போலீசார் எங்களை வீட்டு சிறையில் வைத்து விட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |