மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நவம்பர் 26-ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் அரசுத் துறைகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கண்டித்தும் நாடு முழுவதும் நவம்பர் மாதம் 26-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என மத்திய அரசு ஊழிய சங்கங்களின் மகா சம்மேளனம் ஏற்கனவே அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு ஊழிய சங்கங்களின் மகா சம்மேளனம் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வரும் நவம்பர் 26-ஆம் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஒன்றரை லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் பங்கேற்பார்கள் என முடிவு செய்யப்பட்டதாக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. துரை பாண்டியன் தெரிவித்துள்ளார்.