மத்திய அரசை தட்டிக்கேட்கும் அரசாக திமுக ஆட்சியில் இருக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன்படி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றார். இன்று பரமக்குடியில் பிரசாரம் செய்தபோது பேசிய அவர், “இங்கு கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று எனக்குத் தெரிகிறது.
கோரிக்கை மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க தனியாக துறை உருவாக்கப்படும். நாங்கள் ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களில் 95 மனுக்களுக்கு முடிந்தவரை தீர்வு காணப்படும். புயல் பாதிப்புக்கு மத்திய அரசு தற்போது வரை நிவாரணம் வழங்கவில்லை. மத்திய அரசை தட்டிக்கேட்க மதிமுக இருக்கும். கடைசி நேரத்தில் டெண்டர் விடும் அரசாக அதிமுக ஆட்சி உள்ளது. அதிமுக அரசுக்கு இந்த சட்டப்பேரவை கூட்டம் தான் கடைசி கூட்டமாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.