எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமை தாங்கினார். இவர்கள் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்த மத்திய அரசை கண்டித்தும், சொத்து வரியை குறைக்க கோரியும் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் ஜாகீர் உசேன், பொருளாளர் சைபர் அகமது, செயலாளர்கள் ஜப்பார், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் முகமது ஜிஸ்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கன்னியாகுமரி தொகுதி தலைவர் மைதீன், மாவட்ட பொது செயலாளர் சைதீக் அலி, நெல்லை மண்டல தலைவர் சுல்பீகர் அலி, செய்யது அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.