மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதனை மாவட்ட செயலாளர் தொடங்கிவைத்து பேசியுள்ளார். மேலும் மாவட்ட அமைப்பாளர், மாவட்ட துணைச்செயலாளர், நகர தலைவர், செயலாளர், ஒன்றிய தலைவர் மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.