தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, தனியார்மயமாக்கல் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.மக்கள் விரோத போக்கில் செயல்படுவதாக ஒன்றிய அரசை கண்டித்தும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் போராட்டம் தொடங்கியுள்ளது.
Categories