மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யூ சங்கத்தினர் வாகனத்தில் சாலையில் நிறுத்தி நுதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் நேரு சிலை சிக்னல் அருகே சிஐடியூ சங்கத்தினர் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் இருசக்கர வாகனத்தை 10 நிமிடங்கள் நிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு சிஐடியூ மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கியுள்ளார்.
இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் தர்மர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முனிஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் கம்பத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ நிர்வாகி முருகேசன் தலைமை தாங்கியுள்ளார். இதேப்போல் பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, சின்னமனூர், கடமலைக்குண்டு உள்ளிட்ட 8 இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.