Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து 2 நாட்கள்…. நாடு தழுவிய வேலை நிறுத்தம்… தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு..!!!

ஹிந்த் மஸ்தூர் சபா சார்பில் இன்று திருச்சி, ரயில் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம்.யு. கூட்ட அரங்கில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வருகிற மார்ச் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து மாபெரும் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்  தமிழகத்தில் 40 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், ‘தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நான்கையும் கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய பணமாக்கும் கொள்கை உள்ளிட்ட எந்த பெயராலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு   7, 500 ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி நகரங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும்’ உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Categories

Tech |