தமிழக எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 9 மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை நடந்தது. ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் மற்றொரு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை.
இந்தக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசை மத்திய அரசு என்றே அழைக்கலாம். அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சசிகலா முயற்சிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது. எனக்கும் ஓபிஎஸ்-க்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சென்னையில் புதுவீட்டுக்கு இடம்பெயர்ந்த காரணத்தால் ஆலோசனையில் அவர் பங்கேற்கவில்லை. இது நல்ல நாள் என்பதால் இந்த ஆலோசனையில் ஈடுபட்டேன் என்று கூறியுள்ளார்.