Categories
தேசிய செய்திகள்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு… பட்டதாரிகள் மகிழ்ச்சி…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனாவும் அச்சுறுத்தல் காரணமாக தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது கொரோனாவில் தாக்கம் குறைந்து வருவதால், தேர்வு எழுதுவதற்கான புதிய தேதியை மத்திய கல்வி மந்திரி ரமேஷ் போக்ரியால் நேற்று அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ” நாடு முழுவதிலும் 112 நகரங்களில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் தள்ளிவைக்கப்பட்ட தேர்வு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி நடத்தப்படும். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற, 131 நகரங்களில் இந்த தேர்வு நடத்தப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |