பிரபல நாடு மத்திய கிழக்கு நாடுகளை விட்டு விலகிச் செல்லாது என கூறியுள்ளது.
அமெரிக்க நாட்டின் அதிபர் ஜோ பை டன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு 4 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் முதல் நாள் பயணமாக இஸ்ரேலுக்கு சென்ற ஜோ பை டன் 2-வது நாளாக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். அப்போது ஜூடா நகரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அதோடு ஓமன் துணை பிரதமர் அசாத் பின் தரிக்யு பின் தைமூர் அல், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது, எகிப்து அதிபர் அப்தில் ஃபிடா எல் சிசி, பக்ரைன் அரசர் ஹமீது பின் அஸ்லாம் கலிபா அகியோரும் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஜோர்டான் இளவரசர் அப்துல்லா, குவைத் அரசர் ஷேக் தமீம் பின் அகமது அல்தானி, குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் மார்ஷல் அல் அகமது அல் ஜபீர் அல் ஷபா, ஈராக் பிரதமர் முஸ்தபா அல் ஹதீமி ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு அமெரிக்க அதிபர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் மத்திய கிழக்கு நாடுகளை விட்டு அமெரிக்கா என்றும் விலகி செல்லாது. மத்திய கிழக்கு நாட்டில் வெற்றிடத்தை உருவாக்கவும், அதை சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் நிரப்பவும் விடாது என்றார்.