Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மத்திய சிறையில் கைதி அறையில் செல்போன், டேட்டா கேபிள்”…. போலீசார் பறிமுதல் செய்து விசாரணை….!!!!!

மத்திய சிறைச்சாலையில் மூன்று கைதிகள் செல்போன், சிம் கார்டு, டேட்டா கேபிள் வைத்திருந்ததை போலீசார் சோதனையின் போது பறிமுதல் செய்தார்கள்.

மதுரை மாவட்டத்திலுள்ள மத்திய சிறைச்சாலையில் போலீசார் திடீர் சிறை சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது கைதிகள் அடைத்து வைக்கப்பட்ட ஒரு அறையில் சோதனை செய்ததில் செல்போன், சிம் கார்டு, டேட்டா கேபிள் உள்ளிட்டவை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த அறையில் விக்னேஷ், அருண் பாண்டியன், சாமுவேல் உள்ளிட்ட மூன்று பேர் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சிறைத்துறை நிர்வாக அதிகாரிகள் அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து அவர்கள் யாருடன் பேசினார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். மேலும் இது பற்றி கரிமேடு காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |