தமிழகத்தில் 25 ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் கே.ஏ .அகர்வால் கூறியதாவது,தெற்கு ரயில்வே பணிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் 2,374 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது கடந்த மூன்று ஆண்டுகள் ஒதுக்கப்பட்ட நிதியை விட 89 சதவிகிதம் அதிகம் ஆகும். மத்திய அரசு தமிழகத்தில் நடைபெற்று வரும் 25 ரயில்வே திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 3 ஆயிரத்து 77 கிலோ மீட்டர் தொலைவிலான ரயில் பாதை திட்டங்களை செயல்படுத்த முடியும்.” இவ்வாறு அவர் கூறினார்.