Categories
தேசிய செய்திகள்

“மத்திய பட்ஜெட்”…. இதோ சுவாரசிய தகவல்கள்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

ஜனாதிபதியின் உரையுடன் ஜனவரி 31 (இன்று) நாடாளுமன்றம் கூடுகிறது. இதையடுத்து பிப்ரவரி 1 (நாளைய) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் அது தொடர்பான தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
# இந்தியாவில் 1860ஆம் வருடம் ஏப்ரல் 7ஆம் தேதி முதன் முறையாக பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த ஸ்காட்லாந்து பொருளாதார நிபுணரும், அரசியல்வாதியுமான ஜேம்ஸ் வில்சன் அதனை இங்கிலாந்து அரச குடும்பத்திடம் சமர்ப்பித்தார்.

# முதலாவது பட்ஜெட்டை 26/11/1947 அன்று முன்னாள் நிதி மந்திரி ஆர்.கே.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து நிர்மலா சீதாராமன் 01/02/2020 பட்ஜெட் தாக்கல் செய்தபோது நீண்ட நேரம்  உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது
# அப்போது மேலும் 2 பக்கங்கள் மீதம் இருக்கையில் அவர் சோர்வடைந்ததால், அந்த பக்கங்களை படித்ததாக கருதுமாறு சபாநாயகரை கேட்டுக்கொண்டார். முந்தைய வருடத்தில் 2 மணி 17 நிமிடம் பேசி படைத்த சாதனையை அவரே முறியடித்தார்.
# வார்த்தைகள் அடிப்படையில் பார்த்தால் 1991ஆம் ஆண்டு மன்மோகன்சிங் ஆற்றிய உரை 18 ஆயிரத்து 650 வார்த்தைகளுடன் நீண்ட உரையாக இருந்தது. 2018ஆம் வருடம் அருண் ஜெட்லி ஆற்றியது 18 ஆயிரத்து 604 வார்த்தைகளுடன் 2-வது நீண்ட உரை ஆகும். 1977ஆம் வருடம் ஹிருபாய் முல்ஜிபாய்யின் பட்ஜெட் உரையானது 800 வார்த்தைகளுடன் மிகக் குறுகிய உரை ஆகும்.
# இதனிடையில் அதிகமான பட்ஜெட் தாக்கலை செய்த பெருமை மொரார்ஜி தேசாய் அவர்களை சேரும். 1962 முதல் 1969ஆம் ஆண்டுவரை அவர் 10 பட்ஜெட்கள் தாக்கல் செய்துள்ளார். ப.சிதம்பரம் (9 பட்ஜெட்), பிரணாப் முகர்ஜி (8), யஷ்வந்த் சின்கா (8), மன்மோகன்சிங் (6) போன்றோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர் .
#  1999ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து வழக்கத்தின்படி , பிப்ரவரி மாதத்தின் இறுதி நாளில் மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அந்த வருடம்தான் காலை 11 மணியளவில் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நடைமுறையை யஷ்வந்த் சின்கா கொண்டு வந்தார். இதையடுத்து பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யும் முறை 2017ஆம் ஆண்டு அறிமுகமானது.
# 1955 ஆம் வருடம் வரையிலும் ஆங்கில மொழியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது. காங்கிரஸ் அரசானது இந்தியிலும் பட்ஜெட்டை அச்சடிக்க தொடங்கியது. கொரோனா தொற்று காரணத்தினால் கடந்த வருடம் காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
# இந்திரா காந்திக்கு பின் பட்ஜெட்டை தாக்கல் செய்த 2வது பெண்ணாக நிர்மலா சீதாராமன் இருக்கிறார்.
#  92 வருடங்களாக தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த ரெயில்வே பட்ஜெட், 2017ஆம் ஆண்டில் இருந்து மத்திய பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
# 1950ஆம் வருடம் வரை ஜனாதிபதி மாளிகையில் பட்ஜெட் அச்சடிக்கப்பட்டு வந்தபோது பட்ஜெட் கசிந்ததால், டெல்லி மின்டோ சாலையிலுள்ள அச்சகத்துக்கு இப்பணி மாற்றப்பட்டது. 1980ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகம் அமைந்துள்ள வடக்கு பிளாக் கட்டிடத்தில் அரசு அச்சகம் அமைக்கப்பட்டது.
# இந்திரா காந்தியின் ஆட்சியில் 1973 முதல் 1974 தாக்கல் செய்த பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை ரூபாய் 550 கோடியாக இருந்த காரணத்தால், அது கருப்பு பட்ஜெட் என்று கூறப்பட்டது. 1991ஆம் வருடம் மன்மோகன்சிங் தாக்கல் செய்தது “சகாப்தம் பட்ஜெட்” என அழைக்கப்பட்டது.
#  ப. சிதம்பரம் தாக்கல் செய்த 1997-1998 பட்ஜெட்டில் வசூலை அதிகரிப்பதற்காக வரிகுறைப்பு செய்யப்பட்டதால், அது கனவு பட்ஜெட் என்று அழைக்கப்பட்டது. 2000-ஆம் வருடத்தில் யஷ்வந்த் சின்கா தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டானது மில்லினியம் பட்ஜெட் என அழைக்கப்பட்டது.
# அதனை தொடர்ந்து யஷ்வந்த் தாக்கல் செய்யப்பட்ட 2002-2003 பட்ஜெட்டில் பல வாபஸ் அறிவிப்புகள் வெளிவந்ததால், அது ரோல்பேக் பட்ஜெட் என்று அழைக்கப்பட்டது. கடந்த வருடம் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் அதனை 100 வருடங்களில் இல்லாத ஒரு பட்ஜெட் என்று குறிப்பிட்டார்.

Categories

Tech |