மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்திய பங்குச் சந்தைகள் இன்று காலை உயர்வுடன் தொடங்கின.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச் சந்தைகள் புதிய உயர்வுடன் தொடங்கியன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 443 புள்ளிகள் உயர்ந்து 46 ஆயிரத்து 729 புள்ளிகளாகவும் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 115 புள்ளிகள் அதிகரிப்பு 13749 புள்ளிகளாகவும் இருந்தன. மத்திய பட்ஜெட் தாக்கதின் எதிரொலி காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் உயர்வு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.