நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்ததையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனை கட்டுப்படுத்த தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக தற்போது ஒரு சில மாநிலங்களில் செப்-1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் செப்-1ம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ஆறு முதல் 12ஆம் வகுப்பு வரை 50 சதவீத மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக உத்திரபிரதேச அரசு அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் முகக் கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.