2 லாரிகள் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் காயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி இரட்டை பாலம் சாலையில் பாலு என்பவர் மத்திய பிரதேசத்தில் இருந்து லாரியில் வந்து கொண்டிருந்தார். இந்த லாரியில் கிளீனராக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரும் வந்துள்ளார். இந்நிலையில் பாலுவின் லாரி திடீரென அவ்வழியாக வந்த மற்றொரு லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் பாலு, சீனிவாசன் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் லாரியை அங்கிருந்து அகற்றினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.