Categories
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பலி…!!

மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பலரின் நிலை மோசமாக உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் மன்ட்சார் பாபர்ஸ் காக்ராய் என்ற கிராமத்தில் சாராயம் குடித்த பலர் திடீரென்று மயங்கி விழுந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே 3 பேர் இறந்தனர்.

இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சாராய விற்பனை செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |