மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள சிந்து வாரா மாவட்டத்தில் நடக்கும் கோர்ட்மர் எனப்படும் கல்லெறியும் பாரம்பரிய திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. இந்த விழாவின் போது ஜாம் ஆற்றின் இருபுறமும் சாவர்கான் மற்றும் பந்தூர்னா கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு மறுபுறம் கற்களை எரிகின்றார்கள். அப்போது ஆற்றின் நடுவில் உள்ள ஒரு மரத்தில் எறியப்படும் கொடியை பறக்க போட்டிகள் நடைபெறுகின்றது. கடந்த காலங்களில் நடைபெற்ற இந்த விழாவில் பலர் உயிரிழந்தும் பலர் காயம் அடைந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. இந்த சூழலில் சிந்துவாராவில் நேற்று கல்லெறியும் விழா தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பாதுகாப்பிற்காக மருத்துவர்கள் போலீஸ்காரரும் பணியமர்த்தப்பட்டு இருக்கின்றனர். நிலைமையை கண்காணிப்பதற்கு ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்படுகின்றன என போலீஸர் கூறியுள்ளனர்.
Categories