மத்திய பிரதேசத்தில் வயதான பெண்களுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது இதில் போட்டியாளர்கள் தங்கள் கையில் பாத்திரத்துடன் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டனர்.
மத்திய பிரதேச மாநிலம் பாண்டா கிராமத்தில் நேற்று ஒரு வினோதமான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அது என்னவென்றால் வயதான பெண்கள் தங்கள் கைகளில் பாத்திரத்துடன் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டும். இந்த ஓட்டப்பந்தயத்தை கோபால் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஓட்டப் பந்தயமானது திறந்த வெளியில் மலம் கழிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் 18 வயதான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் இதுபற்றி கூறுகையில், “திறந்தவெளியில் மலம் கழிக்க வேண்டாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாங்கள் இந்த ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொள்கிறோம். ஏனெனில் இப்போது எல்லா வீடுகளிலும் கழிவறைகள் உள்ளன ” என அவர் கூறினார்.