மத்திய காவல் படைகளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 128 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாரபட்சமில்லாமல் அனைவரிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அவ்வகையில் மத்திய காவல் படைகளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் எல்லை பாதுகாப்பு படையில் 10,636 பேருக்கும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 10,602 பேருக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 6,466 பேருக்கும், இந்திய-தீபக் போலீஸ் படையில் 3,845 பேருக்கும், தேசிய பேரிடர் மீட்பு படையில் 514 பேருக்கும், தேசிய பாதுகாப்பு படையினர் 150 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 128 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மத்திய போலீஸ் படையினர் 6,646 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.