நெடுஞ்சாலைகளில் தலைவர்கள் பெயர் மாற்றத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சம்பந்தமில்லை என ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சர்ச்சைக்குள்ளான கிராண்ட் வெஸ்டர்ன் டிரன்க் ரோடு மீண்டும் பெரியார் ஈவேரா சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாலையில் இருந்த பெயர் பலகையில் பெரியார் ஈவெரா சாலையின் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது நெடுஞ்சாலைத்துறை. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் தலைவர்கள் பெயர் மாற்றப்பட்டது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சம்பந்தமில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். இதற்கு அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் அஜாக்கிரதையான செயல்பாடு தான் காரணம். இந்த செயல் பலரது மனங்கள் புண்படுத்தி இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.