நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சில கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்.
இந்நிலையில் தனியார் பள்ளிகளை போலவே கிராமப்புறங்களிலும் பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வசதி ஏற்படுத்தி தர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறிய வழக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.