Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மத்திய, மாநில அரசு திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் யூனியன் அலுவலக கூட்டரங்கில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள், மத்திய நிதி குழு மானிய திட்ட பணிகள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, கிராம வளர்ச்சி திட்ட உதவி இயக்குனர்கள் நாகராஜன், உலகநாதன், கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மேலாளர் முத்துப்பாண்டி மற்றும் பொறியாளர்கள் களப்பணியாளர்கள் ஆணையாளர்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன் மற்றும் கோவில்பட்டி கயத்தார் யூனியன் சேர்ந்து பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி கூடுதல் கலெக்டரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் மத்திய மாநில அரசின் திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தி அறிவுரை வழங்கியுள்ளார்.

Categories

Tech |