பாகிஸ்தான் அணி பலவீனமான சுழற்பந்து பந்துவீச்சை கொண்டுள்ளதால் எளிதாக வீழ்த்தலாம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்..
ஆசிய கோப்பை தொடர் நாளை தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் மோதுகின்றன. அதற்கு அடுத்த நாளே (28ஆம் தேதி) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளது.. 27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. இந்த ஆசிய தொடரில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி தான் உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.. ஏனென்றால் எல்லை பிரச்சினை காரணமாக இரு நாட்டு அணிகளும் 10 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடாமல் இருந்து வருகிறது. அதன்படி ஐசிசி நடத்தும் போட்டியில் மட்டுமே ஆடி வருகிறது.
இந்த இரு அணிகளுமே கடைசியாக துபாய் மைதானத்தில் மோதிய போது இந்தியாவை உலகக்கோப்பையில் முதல்முறையாக பாகிஸ்தான் வென்று சாதனா படைத்தது.. இந்த ஆசிய கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையில் பாகிஸ்தானை பழி தீர்க்குமா என்பதை இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நடப்பு சாம்பியனான இந்திய அணி மொத்தம் 5 ஆசிய கோப்பைகளை வென்றிருக்கிறது. அதே சமயம் தற்போது ரோகித் சர்மா தலைமையில் இளம்வீரர்கள், அனுபவ வீரர்கள் அடங்கிய இந்திய அணி மிக வலுவாக இருக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு முன் காயம் காரணமாக ஜஸ்பிரிட் பும்ரா இந்திய அணியிலிருந்து விலகினார். அதே போல பாகிஸ்தான அணியிலும் நட்சத்திர பவுலரான டாப் பவுலராக கருதப்படும் ஷஹீன் அப்ரிடியும் காயத்தால் விலகி இருப்பதால், இரு அணிகளுமே சரிக்கு சமமாக இருக்கின்றனர்.
பாகிஸ்தான் அணியில் ஷஹீன் அப்ரிடி விலகியதால் இந்திய அணி தப்பித்து விட்டதாக அந்நாட்டு ரசிகர்கள் கலாய்த்து வரும் நிலையில், பாபர் அசாம் போன்ற உலக தரம்வாய்ந்த வீரர் இருப்பதால் நாங்கள் வெல்வோம் என்று சவால் விடுத்து வருகின்றனர். ஆனால் எப்படி இருந்தாலும் இந்திய அணியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பாகிஸ்தானின் பலம் குறைவுதான்.. ஏற்கனவே அந்த அணியில் இருந்து அப்ரிடி விலகியதால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள அந்த அணி பந்துவீச்சில் அவ்வளவு பலமாக இல்லை என்பதே நிதர்சனம்.. குறிப்பாக சதாப்கான், முகமது நவாஸ் உஸ்மான் காதர் ஆகியோரை பார்த்தோம் என்றால் தரம் வாய்ந்த சிறந்த பந்துவீச்சாளர்கள் கிடையாது.
இந்த பாகிஸ்தான் அணியை தவிர்த்து இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளில் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் நிறைந்து இருக்கின்றனர். இந்திய அணியில் யூசுவேந்திர சஹால், அஸ்வின், ஜடேஜா போன்ற அனுபவமாக சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணியில் நம்பர் ஒன் பவுலர் ரஷித் கான் இருக்கிறார்.. இலங்கையில் மாயாஜாலம் நிகழ்த்தக்கூடிய வனிந்து ஹசரங்காவும் இருக்கிறார். எனவே இதில் பலவீனமான ஸ்பின்னர் கொண்டுள்ள அணி பாகிஸ்தான் தான்.. எனவே பாகிஸ்தான் அணி சுழல் பந்துவீச்சில் பலவீனமாக இருப்பதால் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஆகாஷ் சோப்ரா தனது யுடியூப் சேனலில் கூறியதாவது, பாகிஸ்தான் அணி பலவீனமான சுழற்பந்து பந்துவீச்சை கொண்டுள்ளது. எனவே இந்தியா போன்ற அணிகள் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தி வெல்லலாம். முதலில் அவர்களிடம் விக்கெட் எடுக்கக்கூடிய ஸ்பின்னர்களே கிடையாது. அவர்களிடம் நிறைய ஸ்பின்னர்கள் இருந்தாலும் கூட விக்கெட் எடுப்பார்களா? பிஎஸ்எல் தொடரில் சதாப்கான் சிறப்பாக பந்து வீசி இருந்தாலும் கூட, சர்வதேச அளவில் ஒரு நாள் போட்டியில் விக்கெட்டுகள் எடுத்தது கிடையாது.
எனவே அவர் யூசுவேந்திர சஹால் அல்லது ரஷீத் கான் போன்ற வீரர்கள் போல உங்களிடம் விக்கெட் எடுக்கும் பவுலர்கள் இல்லை.. அதே சமயம் இளம் வீரராக இருக்கும் உஸ்மான் காதர் விக்கெட்டுகளை கைப்பற்றுபவராக இருந்தாலும் பெரிய அளவில் போட்டிகளில் விளையாடவில்லை. குறைந்த அளவே அவர் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார். நவாசும் அதே போல தான்..
துபாய் மைதானம் பெரிய அளவில் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்காது என்றாலும் கூட, டி20 கிரிக்கெட்டில் மிடில் ஓவர்களில் சில பந்துவீச்சாளர்கள் கட்டாயம் விக்கெட் எடுக்க வேண்டும்.. அதன்படி பார்த்தால் உண்மையாக அவர்களிடம் அதுபோன்ற பவுலர்கள் இருப்பதாக எனக்கு தெரியவே இல்லை.. அதேபோல அவரிடம் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர்.. ஆனால் அனுபவம் வாய்ந்தவர்களாக அவர்கள் இல்லை.. சமீபத்தில் நசீம் ஷா ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் அவர் விளையாடியது கிடையாது. ஷாநவாஸ் தஹானி பிஎஸ்எல் தொடரில் அற்புதமாக செயல்பட்டு உள்ளார். ஆனால் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் எந்த அளவுக்கு ஆடி இருக்கிறார்.. ஹஸ்னைன் என்பவரும் அதேபோலத்தான்..
அவர்களிடம் ஹரிஸ் ரவூப் மட்டுமே அனுபவம் வாய்ந்த வீரராக நல்ல பார்மில் இருக்கின்றார்.. ஆனாலும் அவர்கள் வேகப்பந்துவீச்சாளர்ஷஹீன் அப்ரிடியை மிஸ் செய்யப் போகிறார்கள்.. ஏனென்றால் அவர் இல்லாமல் அவருடைய வேகப்பந்து வீச்சும் அனுபவம் இல்லாததாகத்தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்..