அமெரிக்க விமானப்படை பணியில் இருக்கும் போது நெற்றியில் திலகம் அணிய அனுமதி அளித்திருக்கிறது.
அமெரிக்க விமானப் படையில் தர்ஷன் ஷா பணியாற்றி வருகிறார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவர் அமெரிக்காவின் விமானப் படை தளத்தில் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் இதுவரை முதல் முறையாக நெற்றியில் திலகம் அணிய அமெரிக்க விமான படை அனுமதி அளித்திருக்கிறது.
இது பற்றி தர்ஷன் ஷா பேசும்போது , ” நான் விமானப்படையில் உறுப்பினராக இருக்கும் போது எனது முக்கிய அடையாளங்களில் ஒன்றான சீருடையுடன் திலகத்தையும் அணிகிறேன். இதை அணிவதை நான் மிகவும் சிறப்பாக உணர்கின்றேன். வாழ்க்கையில் கஷ்டங்கள் மற்றும் சிரமங்களை கடந்து செல்ல இது எனக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது.
சீருடையில் இருக்கும் போதும் மத சுதந்திரத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் உள்ள நாட்டில் நான் வாழ்வதற்கு பெருமைப்படுகிறேன் ” என கூறியுள்ளார். அமெரிக்க விமானப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த மத சுதந்திரத்துக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்திருக்கின்றனர்.