தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு கட்சியில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர். தேர்தலில் தோல்விக்குப் பிறகு கமல்ஹாசனின் அணுகுமுறையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அவர் மாறுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. தற்போது வரை கட்சியிலிருந்து துணைத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் ராஜினாமா செய்துள்ளனர். சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட கமல்ஹாசன் கூட வெற்றி பெற முடியாத சூழலில் மொத்த கூடாரம் காலியாகி விட்டது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய மருத்துவர் மகேந்திரன் இன்று காலை 10 மணி அளவில் அண்ணா அறிவாலயம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் மகேந்திரன் அதிமுகவுக்கு சாதகமாக செயல்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், திடீரென்று திமுக கோட்டைக்கு வர உள்ளார். அதிமுக கோட்டையாக கருதப்படும் கொங்கு பகுதியில் திமுகவின் செல்வாக்கை அதிகரிக்க ஸ்டாலின் புது ரூட்டை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.